கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்

கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.என்.வெங்கடாசலம் தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வேண்டும் - அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம்
x
கூட்டுறவு வங்கிகளின் மூலதன தேவைக்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.என்.வெங்கடாசலம் தெரிவித்தார். திருவண்ணாமலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யூனியன் சங்கத்தின் 6வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டுறவு வங்கிகள் மிகப்பெரிய சிக்கலில் உள்ள நிலையில், வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ஒன்றிணைப்பது, காலிப்பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்