வேலூரில் நீர் உறிஞ்சு குழிகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
வேலூரில் நீராதாரம் பெருக்க மலைகளில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சு குழிகளால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பேர்ணாம்பட்டு அடுத்த அரவெட்லா மலை பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பயிர் நிலங்கள் உள்ளன. இங்கு நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கற்களை கொண்டு, தடுப்பு சுவர் அமைத்து, அதற்கு அருகில் பள்ளங்கள் வெட்டப்படுகின்றன. இந்த பணியில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் மழை பொழியும்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்வதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Next Story