அரசு மணல் குவாரியல் நிலத்தடி நீர் பாதிப்பு : தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் - மக்கள் அவதி
ராணிப்பேட்டை பாலாற்றில் இயங்கும் அரசு மணல்குவாரியால், நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றதால், அங்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பருவமழை கைவிட்டதால், தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விதிவிலக்கல்ல வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை. அங்கும் கடும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குளங்கள், ஏரிகள், கிணறுகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் பாலாற்றில் இயங்கும் அரசு மணல் குவாரியே என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அனுமதித்த அளவைவிட பாலாற்றில் மணல் அள்ளப்படுவதால், நிலத்தடி நீர், அதள பாதாளத்திற்கு சென்று, நீர்நிலைகள் வறண்டுவிட்டதாக அவர்கள் புகார் கூறுகின்றனர். மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி, உடனடியாக அரசு மணல் குவாரியை மூட வேண்டும் என்பதே ராணிப்பேட்டை மக்களின் கோரிக்கையாகும்.
Next Story