நாகை - எரிசாராயம் கடத்தி வந்த இளைஞர் : எரிசாராயத்தை கீழே போட்டு உடைத்த பொதுமக்கள்
காரைக்காலில் இருந்து நாகைக்கு எரிசாராயம் கடத்தி வந்த நபரின் இருசக்கர வாகனம் மோதியதில், மத்திய அரசு ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார்.
காரைக்காலில் இருந்து நாகைக்கு எரிசாராயம் கடத்தி வந்த நபரின் இருசக்கர வாகனம் மோதியதில், மத்திய அரசு ஊழியர் ஒருவர் படுகாயமடைந்தார். சூரியகுமார் என்ற இளைஞர் எரிசாரயம் கடத்தி வந்த நிலையில், பொரவச்சேரி பெட்ரோல் பங்க் நிலையம் அருகே முன்னாள் சென்ற பைக் மீது மோதினார். இதில் மத்திய அரசு ஊழியர் ரவிசந்திரன் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், இளைஞர் கடத்தி வந்த எரிசாரய பாக்கெட்களை சாலையில் போட்டு உடைத்தனர். போலீசார் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
Next Story