ஒருதலை காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் - கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை
திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி , ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த மலர்விழி மீரா என்ற மாணவி தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவரை அதே பகுதியை சேர்ந்த முரளி என்பவர் தலைப்பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. முரளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளதால் அவரது காதலை ஏற்க மலர்விழி மீரா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளி, நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மலர்விழி மீராவை சரமாரியாக கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த மாணவி அலறித் துடித்தார். அக்கம்பக்கத்தினர் மலர் விழி மீராவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மீரா உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மீராவின் உறவினர்கள் முரளியை சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த முரளி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story