குடிநீர் பிரச்சினையை தீர்க்க, ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க, ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை - திமுக தலைவர் ஸ்டாலின்
x
சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் மக்கள் குடிநீருக்கு அலையும் நிலைக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சரே காரணம் என்றும் குற்றம் சாட்டி உள்ளார். தண்ணீர் பிரச்சனையில் அலட்சியமாக உள்ள அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மழை பற்றாக்குறை இருப்பது தெரிந்தும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். கிருஷ்ணா நதி நீரை பெற ஆந்திர முதலமைச்சரை சந்திக்க  அமைச்சர் வேலுமணி முயற்சிக்கவில்லை என்று விமர்சித்துள்ள ஸ்டாலின், தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை திமுகவினர் மேலும் முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்றும், அறிக்​கையில் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்