போலீஸ் அனுமதியோடு ஆறுகளில் மறைமுக மணல் கொள்ளை - துரைமுருகன்
குடிநீர் பஞ்சம் குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசுக்கு, தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய துரைமுருகன், பாலாற்றில் அரசு மணல் குவாரிகள் எங்குமில்லை என ஆட்சியர் கூறுவதாகவும், ஆனால் போலீசின் மறைமுக அனுமதியோடு மணல் திருட்டு தொடர்ந்து நடைபெறுவதால் தான், மேலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் சென்னைக்கு இதுவரையில் குடிநீர் வழங்கி வருவதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். தண்ணீருகாக உள்நாட்டு யுத்தம் ஏற்படும் நிலை உருவாகி உள்ள நிலையில், குடிநீர் வழங்க ஒதுக்க வேண்டிய நிதியை, குப்பை தொட்டி வாங்க ஆட்சியாளர்கள் செலவு செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.குடிநீர் பஞ்சத்தை போக்க தமிழக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story