ரயில்வே துறையின் அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம்
ரயில்வே துறை தகவல் பரிமாற்றத்தில் பிராந்திய மொழியை தவிர்க்குமாறு தென்னக ரயில்வே அறிவுறித்தியதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறை தகவல் பரிமாற்றத்தில் பிராந்திய மொழியை தவிர்க்குமாறு தென்னக ரயில்வே அறிவுறித்தியதற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தை காட்டி இந்தியை திணிக்கும் இந்த முயற்சி கடுமையாக கண்டனத்திற்குறியது என குறிப்பிட்டுள்ளார். ரயில் விபத்துகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இதன் பின்னணியில் மொழித்திணிப்பு நோக்கம் இருப்பதை மறுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
Next Story