ரயில்வே துறையின் மொழிக் கட்டுப்பாடு : திமுக எதிர்ப்பு - சுற்றறிக்கை ரத்து
ரயில்வே துறையின் புதிய உத்தரவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் மண்டல கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் நிலைய அதிகாரிகள் இடையே இனிமேல் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தகவல்களை பரிமாற வேண்டும் என ரயில்வே துறை அறிவுறுத்தி இருந்தது. இந்த உத்தரவுக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தயாநிதிமாறன் எம்பி, ஆர் எஸ் பாரதி, சேகர்பாபு எம்.எல்.ஏ ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளித்தனர். அதில், பிராந்திய மொழிகளில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த, தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகுல்ஜெயின், பழைய நடைறையே தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
"தொலைபேசி மூலமாக ஸ்டாலின் பேசினார்" - தயாநிதி மாறன்
தெற்கு ரயில்வே பொதுமேலாளரை சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தொலைபேசி மூலமாக ஸ்டாலின், இந்த கோரிக்கையை வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
Next Story