மன்னார்குடியில் அனுமதியின்றி இயங்கி வந்த டாஸ்மாக் பார்களுக்கு சீல்
மன்னார்குடியில் அனுமதி இன்றி இயங்கி வந்த டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மன்னார்குடியில் அனுமதி இன்றி இயங்கி வந்த டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் சீல் வைத்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உரிய அனுமதி இன்றி பார்கள் செயல்படுவதாக திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு தொடர் புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்கள் வசுந்தரா தேவி தலைமையில், அதிகாரிகள் மன்னார்குடியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 7 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
Next Story