மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் : தமிழக விவசாயிகளுக்கு உதவுக - வாசன்
மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் பயன்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் பயன்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள சுமார் 75 சதவீத விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் தொடர்பாக இன்னும் சிக்கல் நீடிப்பதால், அந்த நிதியுதவி பெறுவதில் சிரமம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, விவசாயிகள் வாழும் இடத்திற்கே சென்று பட்டா மாறுதல் முகாம் நடத்தி, அவர்களுக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story