குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை : திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை : திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
x
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால்கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திற்பரப்பு அருவியில்வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு தற்போது சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைவாக காணப்படுகிறது. விடுமுறைக் காலம் முடிந்து விட்டதால் கூட்டம் குறைவாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பைக்காரா நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரிப்பு :



தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் நீலகிரி மாவட்டம் பைக்காரா அணைக்கட்டில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மின்சார உற்பத்திக்காக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தண்ணீரில் இறங்கி  புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று வனத்துறையினர்  எச்சரித்து வருகின்றனர். தொடர் மழையால் ஊட்டி கூடலூர் சாலையில் ஆங்காங்கே புதிதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றியுள்ளன. ரம்மியமாக காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்