மதுரையில் சகோதரர்களை ஓடஓட விரட்டி தாக்குதல் : ஒருவர் படுகொலை
மதுரையில் சகோதரர்களை ஓடஓட விரட்டி வெட்டியபோது ஒருவர் உயிரிழந்த நிலையில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
மதுரையில் சகோதரர்களை ஓடஓட விரட்டி வெட்டியபோது, ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மதுரை மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரஞ்சித் மற்றும் அஜீத். வழக்கு ஒன்றில் தொடர்புடைய இவர்கள் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஜாமின் கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று காவல் நிலையம் சென்றபோது, இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் சகோதரர்களை வழிமறித்து வெட்டியுள்ளனர்.ரஞ்சித் தலையில் படுகாயமடைந்த நிலையில், அஜீத்தை ஓடஓட விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக விக்னேஷ்குமார், செல்வராஜ் ஆகிய இருவர் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.
Next Story