கடல் சீற்றத்தால் மீனவ கிராமம் பாதிப்பு : குமரி எம்.பி. வசந்த்குமார் ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் பார்வையிட்டார்.
கடல் சீற்றத்தால் மீனவ கிராமம் பாதிப்பு : குமரி எம்.பி. வசந்த்குமார் ஆட்சியரிடம் மனு
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்த நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் பார்வையிட்டார். தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடல் சீற்றத்தாலும், கன மழையாலும் வள்ளவிளை, மேல்மிடாலம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்கள் சேதமடைந்தன. இதனை பார்வையிட்ட வசந்தகுமார், போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உதவ வேண்டும் என, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்