திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசிய வழக்குகளில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசிய வழக்குகளில், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி விவகாரம், முகிலன் மாயமான விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டங்களில், இரண்டு பிரிவினர் இடையே விரோதத்தை தூண்டும் வகையில் திருமுருகன்காந்தி பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகளை எதிர்த்து பேசினால், இரண்டு பிரிவினர் இடையே விரோதத்தை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்ய முடியாது எனக் கூறி, திருமுருகன் காந்திக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்
Next Story