"தவறான பிரசாரத்தால் தோல்வி என்பது விரக்தியின் வெளிப்பாடு" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து
தி.மு.க.வின் தவறான பிரசாரத்தால் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசி வருவது விரக்தியின் வெளிப்பாடு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
தி.மு.க.வின் தவறான பிரசாரத்தால் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசி வருவது விரக்தியின் வெளிப்பாடு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலை பொறுத்தவரை தமிழக மக்கள் நன்கு ஆராய்ந்து வாக்களித்து தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்துள்ளதாக தெரிவித்தார். தற்போது மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொடர்வதாகவும், உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலைக்கேற்ப முடிவெடுப்போம் என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.
Next Story