அணு கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது : கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்

கூடங்குளம் பகுதியில் அமைய அணு கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அணு கழிவு மையத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது : கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்
x
இது தொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அணு உலை 1, 2-இல் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே அணு கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அணு உலை கழிவுகள் இங்கு கொண்டு வரப்படாது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு கழிவுகளில் இருந்து கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது என்றும் கூடங்குளம் அணு மின் நிலைய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. அணு கழிவு மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிலம், நீர் ஆகியவை  மாசுபடாது என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றியே அணு கழிவு மையம் அமைக்கப்படுவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள் அணு கழிவு மையம் அமைக்க வேண்டி இருப்பதால் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்