அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
மதுரை மேலூர் அருகே மேலபதினெட்டான்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
மதுரை மேலூர் அருகே மேலபதினெட்டான்குடியில் உள்ள அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதற்காக 10 க்கும் மேற்பட்ட மண்குதிரைகள் தயார் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பக்தர்கள் சார்பில் மண்குதிரைகளான புரவிகள் கொண்டு வரப்பட்டு ஊர் மந்தையில் வைக்கப்பட்டது. அப்போது பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட நெல்மணிகளை மண்குதிரையின் காலில் கொட்டி பெண்கள் வழிபட்டனர். இவ்வாறு வணங்கினால் மழைபெய்து விவசாயம் செழித்து அதிக விளைச்சல் ஏற்படும் என்பது ஐதீகம்.
Next Story