புத்தர் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு : ஒப்படைக்க கோரி தாசில்தாரிடம் மனு
புதுக்கோட்டை மாவட்டம் பனையவயல் கிராமத்தில் புத்தருக்கு கோயில் கட்டி பகுஜன் சமாஜ் கட்சியினர் வழிபட்டு வந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பனையவயல் கிராமத்தில் புத்தருக்கு கோயில் கட்டி பகுஜன் சமாஜ் கட்சியினர் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு வந்த ஆவுடையார் கோவில் தாசில்தார் மற்றும் ஊழியர்கள், புத்தர் சிலையை அகற்றி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவுடையார் கோவில் தாலுக்கா அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் பின்னர் தாசில்தாரிடம் மனு அளித்தனர். பேச்சுவார்த்தை நடத்தி சிலை மீண்டும் ஒப்படைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story