நவீன தொழில்நுட்பத்தில் கொய்மலர் சாகுபடி பயிற்சி : ஆர்வத்துடன் கற்கும் விவசாயிகள்...
கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் இந்திய - இஸ்ரேல் நாடுகளின் நவீன தொழில்நுட்பத்தில் விவசாயிகளுக்கு கொய்மலர்கள் சாகுபடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டில் உள்ள விவசாயிகள் சாதாரணமாக சொட்டு நீர் பாசன முறையில்தான் கொய்மலர்களை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில், இந்திய -இஸ்ரேல் கூட்டு தொழில்நுட்பம் மூலம், உற்பத்திக்கு குறைந்த அளவே, நீர் தேவைப்படும். எனவே, தேசிய தோட்டக்கலை திட்ட இயக்கத்தின் மூலம் கொய்மலர்கள் சாகுபடி செய்யும் நவீன தொழில் முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மலர் சாகுபடி குறித்த தெளிவான விளக்கங்களை நேரடி பயிற்சிகள் மூலம் விவசாயிகள் ஆர்வத்துடன் அறிந்து கொள்கின்றனர்.
Next Story