நடிகர் சங்க தேர்தல்: பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தல்: பாண்டவர் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு
x
நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் தேவையில்லாமல் கதாநாயக நடிகர்களை பொருளாதார நிர்பந்தத்தில் சிக்க வைப்பதை தடுக்க சட்ட ரீதியான பாதுகாப்பு தரப்படும், இதற்காக புது சட்டதிட்டங்கள் வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சங்க கட்டிடத்திற்காக முழுமூச்சாக செயல்பட்டதால் தற்காலிமாக தடைபட்டிருந்த நாடக விழாக்கள், போட்டிகள்,  உள்ளிட்டவை உலக தரம் வாய்ந்த புதிய கட்டிடத்தில் அரஙகேறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தகுதியான பழம்பெரும் கலைஞர்களுக்கான பொற்கிழியின் பணமதிப்பு உயர்த்தப்படும் எனவும் தகுதியான கலைஞர்களை தமிழக அரசின் கலைமாமணி விருதுக்காக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தோடு இணைந்து பரிந்துரை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆய்வாளர் குழு அமைக்கப்பட்டு சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களின் உண்மையான வடிவத்தை மீண்டும் கொண்டு வந்து உலக அரங்கிற்கு எடுத்து செல்வோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்