ஆறு துறைகளுக்கான கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர்
பள்ளிக்கல்வி, உள்ளாட்சி உள்பட ஆறு துறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்வின் போது, ஆறு துறையை சார்ந்த அமைச்சர்கள், செங்கோட்டையன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், மா.பா.பாண்டியராஜன் உள்ளிட்டோரும், உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பள்ளிகல்வித்துறை சார்பில் 12 கோடி ரூபாய் செலவில் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறன் அட்டை வழங்கினார். சுற்றுச்சூழல் துறையில் சிறப்பாக செயல்பட்ட நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் நெல்லை முன்னாள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு பசுமை விருதுகளை வழங்கி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பிளாஸ்டிக் தடையாணையை சிறப்பாக செயல்படுத்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா மற்றும் சில்பா பிரபாகர் ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
Next Story