மஞ்சள் கிழங்கில் ரசாயனம் கலந்து கலப்படம் : 10 ஆலைகள் மூட உத்தரவு
மதுரை சிக்கந்தர் சாவடியில் 250 சமையல் மஞ்சள் கிழங்கு சப்ளை செய்யும் குடோன்கள் உள்ளன.
மதுரை சிக்கந்தர் சாவடியில் 250 சமையல் மஞ்சள் கிழங்கு சப்ளை செய்யும் குடோன்கள் உள்ளன. இந்நிலையில் அதில் 10 குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் மஞ்சள் நிறம் தரக்கூடிய உயிருக்கு ஆபத்தான ரசாயனம் மஞ்சள் கிழங்கில் கலப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து 6 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. மஞ்சள் கிழங்கு சப்ளை செய்யும் 10 ஆலைகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட மஞ்சளை பெங்களுரூவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story