சோப்பு தயாரிக்கும் பணியில் பழங்குடியின பெண்கள் : தேன் மெழுகாலான சோப்பு தயாரிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயற்கை முறையில் தேன் மெழுகிலான சோப்பு தயாரிக்கும் பணியில் பழங்குடியின பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பர்லியார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோழிக்கரை, குரும்பாடி, புதுக்காடு, வடுகன்தோட்டம் பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக தனியார் தொண்டு நிறுவனம் சோப்பு தயாரிக்கும் தொழிற்கூடம் அமைத்து கொடுத்துள்ளது. இயற்கையில் கிடைக்கும் தேன் மெழுகைக் கொண்டு குளியல் சோப் மற்றும் லிப் பாம் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். இதில் தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் எதையும் பயன்படுத்துவதில்லை என்று கூறுகின்றனர். தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் அடையை பயன்படுத்தி சோப்பு தயாரித்து விற்பனை செய்கின்றனர். தனியார் நிறுவனமே மார்கெட்டிங் செய்து அதிக அளவிலான உற்பத்திக்கு முன்பதிவு செய்துள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது.
Next Story