அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் பேருந்து நிறுத்தம் : பொதுமக்கள் பாராட்டு
கிருஷ்ணகிரியில் நவீன வசதிகளுடன் ஹைடெக் பேருந்து நிறுத்தத்தை தனியார் நிறுவனம் ஒன்று அமைத்து பராமரித்து வருகிறது.
TCR CIRCLE என்ற பெயரில் பூங்கா மற்றும் அதனுடன் பேருந்து நிறுத்தத்தை கிருஷ்ணகிரி நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை அமைத்துள்ளது. பயணிகள் அமர இருக்கைகள், மின் விளக்குகள், மின்விசிறிகள், மொபைல் மற்றும் லேப்டாப் சார்ஜர் பிளக் பாயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அதிவேக இலவச இணையதள வசதி, கண்காணிப்பு கேமராக்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, குப்பைத்தொட்டி , இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக பேசும் வகையிலான தொலைபேசி வசதி என பல்வேறு வசதிகளோடு இந்த ஹைடெக் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஒரு தனியார் நிறுவனம் தன் சொந்த செலவில் ஹைடெக் வசதிகளோடு பேருந்து நிறுத்தம் அமைத்துள்ளது. சுயநலம் பெருகி வரும் இந்த காலகட்டத்தில் எந்தவித ஆதாயமும் தேடாமல் தனது சொந்த பணத்தில் ஹைடெக் பேருந்து நிறுத்தம் அமைத்த தனியார் மருத்துவமனை நிறுவனர் சவுந்தர்ராஜனுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Next Story