வீட்டைவிட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் : படுகாயங்களுடன் காதலன் உடல் மீட்பு

தஞ்சாவூரில் வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துக்கொண்ட தம்பதியை, பெண் வீட்டார் கண்டுபிடித்து காதலனை மட்டும் தனியே அழைத்து சென்று கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
வீட்டைவிட்டு வெளியேறி காதலர்கள் திருமணம் : படுகாயங்களுடன் காதலன் உடல் மீட்பு
x
தஞ்சாவூர் மாவட்டம் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர், இலுப்பக் கோரையூரைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார். இந்நிலையில் காதலி வீட்டைவிட்டு வெளியேறியதால் ஜெயங்கொண்டம் அருகே ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் நடந்த சம்பவத்தை தனது தாய்க்கு தொலைபேசி மூலம் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். அப்போது சமாதானமாக பேசிய தாய் இருவரும் இருக்கும் இடத்தை அறிந்துக்கொண்டார். இதனையடுத்து 9 பேர் கொண்ட கும்பல் இருவரையும் ஊருக்கு காரில் அழைத்து வந்தனர். இந்நிலையில் இளம்பெண்ணை உறவினர் வீட்டில் இறக்கிவிட்டு பிரசாந்த்தை தனியே அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் பணவெளி சுடுகாடு அருகே படுகாயங்களுடன் பிரசாந்த்தின் உடலை போலீசார் மீட்டனர். பிரசாந்த்தை அவரது காதலியின் உறவினர்கள் வாயில் துணியை வைத்து கட்டி கம்பியால் அடித்து கொலை செய்ததாக பிரசாந்த்தின் உறவினர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்