இலங்கை குண்டு வெடிப்பு : கோவையை சேர்ந்த அசாருதீனிடம் தீவிர விசாரணை

இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தற்கொலைபடை தீவிரவாதி ஜகார்ன் ஹசீமுடன், கோவை சேர்ந்த அசாருதீன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
x
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையைச் சேர்ந்த சிலர் தீவிரவாத இயக்கங்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து தெரிய வந்ததாக கூறப்பட்டுள்ளது.  இவர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் சேர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோவையில் உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர், அல் அமீன் காலனி, சுண்ணாம்பு கால்வாய், பொன் விழா நகர் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை மேற்கொண்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் 14 செல்போன்கள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு, 4 ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை கூறியுள்ளது. மேலும், இலங்கை குண்டு வெடிப்பில் ஈடுப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த தற்கொலைபடை தீவிரவாதி ஜகார்ன் ஹசீமுடன், கோவை சேர்ந்த அசாருதீன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அசாருதீனிடம், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்