முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராஜ்பவனில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை எடுத்த முடிவின் மீது காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது, புதிய தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபி தொடர்பாகவும் ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆளுநருடன் முதலமைச்சரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆளுநர் சந்தித்து பேசிய நிலையில் முதலமைச்சரின் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசியதும், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Next Story