750 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை ஒன்றரை மாத தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தது
1 கிலோவிற்கு குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது அரிதாக பார்க்கப்படுகிறது.
1 கிலோவிற்கு குறைவான எடையில் பிறக்கும் குழந்தைகள் உயிர்பிழைப்பது அரிதாக பார்க்கப்படுகிறது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 1 கிலோவிற்கும் குறைவான எடையில் பிறந்த 30 குழந்தைகளில் 15 குழந்தைகளை உயிர்ப்பிழைக்க வைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த மரக்காத்தூரை சேர்ந்த தங்கப்பாண்டி, மஞ்சுளா தம்பதிக்கு 750 கிராமில் பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை ஒன்றரை மாதங்களாக தங்கள் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்த சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், குழந்தையை முழுமையாக குணப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.
Next Story