"மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு இல்லை" - டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்காதது கவலை அளிப்பதாக உள்ளது என டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம்
சேலம் ,ஈரோடு, திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
இந்த நிலையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கபினி அணை நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் பட்டத்தில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளதாகவும் அதன் பிறகே அணை திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Next Story