கோலாகலமாக நடைபெற்ற வைகாசி விசாக திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த அம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் மேலூர் திரௌபதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பூக்குழி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்த அம்மனை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். திருவிழாவில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றனர். கோவில் பூசாரியின் உதவியாளர் வீட்டின் சுவரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த அம்மன் சிலையை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மீட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அதன் பிறகு நடைபெற்ற முதல் வைகாசி விசாக திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story