நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால் போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் ஆஜராக உத்தரவு

நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால், மதுரை போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால் போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் ஆஜராக உத்தரவு
x
நீதிமன்றத்தில் அளித்த உறுதியை நிறைவேற்றாததால், மதுரை போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை கண்காணிப்பாளர் கண்ணாயிரம் என்பவர் சம்பள பாக்கி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த போது, 3 லட்சம் ரூபாய் காசோலையை மனுதாரருக்கு வழங்குவதாக மேலாண்மை இயக்குனர் நேரில் ஆஜராகி உறுதியளித்தார். இந்நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் வந்த போது, மனுதாரருக்கு வழங்குவதாக உறுதி அளித்த 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்படவில்லை என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையிட்டார். இதனையடுத்து வரும் 17ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக போக்குவரத்து மேலாண்மை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்