ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் - புதிய அறிமுகம்

சென்னை காமராஜர் சாலையில், வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில், ஸ்டாப் லைன் எல் இ டி சிக்னல்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஸ்டாப் லைன் எல்.இ.டி சிக்னல் - புதிய அறிமுகம்
x
சென்னை காமராஜர் சாலையில், வாகன ஓட்டிகள் பயனடையும் வகையில், ஸ்டாப் லைன் எல் இ டி சிக்னல்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். சாலை விபத்துக்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் சென்னை போக்குவரத்து போலீசார், பல்வேறு புதிய தொழிற்நுட்பங்களை, பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், டிஜிபி அலுவலக சிக்னலில் சோதனை முறையில்  எல்இடி சிக்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் ஒளிரும் வகையில் போக்குவரத்து சிக்னலுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த எல்இடி சிக்னல் ஸ்டாப் லைன் எனப்படும் நிறுத்தக் கோட்டில் பதிக்கப்பட்டுள்ளது. சிக்னலுக்கு தகுந்தார் போல, சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களில் இந்த எல்இடி சிக்னல் ஒளிர்கிறது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் சிக்னலை மதிக்காமலும், நிறுத்தக் கோட்டில் நிற்காமலும், சிக்னலை வேகமாகவும் கடப்பதால், அதிகளவில் விபத்துகள் நிகழ்வதாகவும், இதனை தடுத்திடவே, இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்