கிராமத்தில் நிலவிய குடிநீர் பஞ்சம் - கிணற்றை தூர் வாரிய இளைஞர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வற்றிப்போன கிணற்றை, கிராமத்து இளைஞர்கள் ஒன்றிணைந்து தூர் வாரி தற்போது தண்ணீருக்கு பஞ்சம் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளனர்.
செய்யாறை அடுத்த சுமங்கலி கிராமத்தில் 100 அடி ஆழ கிணற்றை குடிநீருக்காக கிராம மக்கள் பல ஆண்டுகளுக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிணறு வறண்டு போனது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்குநாள் குறைந்து வந்ததால் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகரித்தது. கடந்த 5 ஆண்டுகளாக குடிநீருக்காக கிராம மக்கள் சிரமம் அடைந்ததால், பசுமை சுமங்கலி என்ற அமைப்பை சேர்ந்த கிராமத்து இளைஞர்கள் கிணற்றை தூர்வார முடிவு செய்தனர். இதனையடுத்து தங்கள் சொந்த செலவில் கிணற்றை சுத்தம் செய்து தூர்வாரி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். இளைஞர்களின் இந்த செயல், கிராம மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
Next Story