4 வாரத்தில் தனி இணையதளம் அமைக்க வேண்டும் : மின்வாரிய தலைவருக்கு உயர்​நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மின் வாரிய குடியிருப்புகள் தொடர்பான வழக்கில் நான்கு வாரத்தில் தனி இணையதளம் உருவாக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
4 வாரத்தில் தனி இணையதளம் அமைக்க வேண்டும் : மின்வாரிய தலைவருக்கு உயர்​நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
x
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர் கருணாமூர்த்தி, மின்வாரிய குடியிருப்புக்கு, வாடகை வசூலிப்பது தொடர்பாக அனல் மின் நிலைய தலைமை பொறியாளர் பிறப்பித்த  உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், மனுதாரர் மின்வாரிய குடியிருப்பை உடனடியாக காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மின் வாரிய குடியிருப்பு ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பராமரிக்கவும் 4 வாரத்தில் தனி இணைய தளம் உருவாக்க வேண்டும் என்றும், மின்வாரிய குடியிருப்பில், சட்டவிரோத குடியிருப்பு ஒதுக்கீட்டை கண்டுபிடிக்க தனி குழு அமைக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளார். இந்த குழு ஆய்வு நடத்தி சட்டவிரோதமாக குடியிருப்பவர்களுக்கு 60 நாளில் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வீட்டை காலி செய்யாதவர்களை, சட்டப்படி வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை 30 நாளில் முடிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவது தொடர்பாக மின்வாரிய தலைவர் கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்