கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் வீடு : நிதி வழங்கக் கோரி அமைச்சர் வேலுமணி கோரிக்கை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட நிதி வழங்குமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்தார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் வீடுகள் கட்ட நிதி வழங்குமாறு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோரிக்கை விடுத்தார். டெல்லியில் மத்திய அமைச்சரை நேரில் சந்தித்த அவர், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 876 கோடியே 93 லட்சம் ரூபாயை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, குடிநீர் பிரச்சனை தீர்வு காண்பதற்கான மத்திய ஜலசக்தி துறை சார்பில் முதலாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார்.
Next Story