விமானப்படை தளத்தில் இறங்கிய டிரோன் கேமரா...
விமானப்படை தளம் மற்றும் பயிற்சி மையத்தில் கேமரா இணைக்கப்பட்ட ட்ரோன் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானப்படை தளம் மற்றும் பயிற்சி மையத்தில் கேமரா இணைக்கப்பட்ட ட்ரோன் தரை இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, கிழக்கு தாம்பரம் விமான படைத்தளம் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் ஒளிப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீர் என அங்கு கேமரா தரை இறங்கி உள்ளது. அதனை கண்ட அதிகாரிகள் டிரோன் கேமராவை கைப்பற்றியதுடன், விமானப்படை போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் ட்ரோன் கேமராவை இயக்கியதாக சந்தேகத்தின் பேரில் சென்னை புழல் பகுதியை சேர்ந்த முகமது சபீர் அப்துல்லா , சூளைமேட்டை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரையும் பிடித்து சேலையூர் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் விமானபடை தளத்தில் பரபரப்பை ஏற்பட்டது.
Next Story