புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
x
தம் மீது தனிப்பற்றும், பாசமும் வைத்திருந்த ஒருவரை இழந்து தவிப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜானகிராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், புதுச்சேரி கழக தொண்டர்களுக்கும் தமது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

ஜானகிராமன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் :



புதுச்சேரி அரசியலில், குழப்பம் நிலவிய போது, பாமக ஆதரவுடன் முதலமைச்சராக ஜானகிராமன் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்துள்ள டாக்டர் ராமதாஸ், அவரை இழந்து வாடும் குடும்பத்தினரும், திமுகவினருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக, தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்