ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும் - காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை

காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
கடந்த ஆண்டைப்  போலவே இந்த ஆண்டும்  டெல்டா பாசனத்துக்காக ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

மழை பெய்தால் மட்டுமே தங்கள் கவலை தீரும் என நம்பும் அவர்கள்,  மேட்டூரில் இருந்து தண்ணீர் வராத இந்த சூழலில்  டெல்டாவில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர் . . கிளை வாய்க்கால்களில் ரெகுலேட்டர்கள், பாசன மதகுகள் ஆகிய பணிகளை உடனே முடிக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

காவிரி ஆற்றில் தண்ணீர் வருவதற்குள் தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்தால் தான் வீணாக தண்ணீர் கடலில் கலப்பதை தடுக்க முடியும் என்று அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 

தற்போது மின்மோட்டாரை நம்பி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமான  மேட்டூர் அணையில் இருந்து  ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நீர் இருப்பு குறைவாக இருந்த தால், கடந்த ஆண்டும்  ஜூன் 12- ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Next Story

மேலும் செய்திகள்