குடிபோதையில் காவல் உதவி ஆய்வாளர் மண்டை உடைப்பு : இளைஞர் கைது
குடிபோதையில் காவல் உதவி ஆய்வாளர் மண்டையை பாட்டிலால் உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஆண்ட்ரின் ரமேஷ், நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ராஜமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற இளைஞர், உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரமேஷ், குடித்து விட்டு நேராக வீட்டிற்கு செல்லுமாறு சதீஷிடம் அறிவுறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், திடீரென்று கையிலிருந்த பீர் பாட்டிலால் உதவி ஆய்வாளர் ரமேஷின் மண்டையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரமேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்கு வந்த போலீசார் ரமேசை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர்.
Next Story