சென்னை மாதவரம் பகுதியில் கோயில் உண்டியல்கள் உடைத்து திருட்டு

சென்னை, மாதவரம் பகுதியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருடிய சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாதவரம் பகுதியில் கோயில் உண்டியல்கள் உடைத்து திருட்டு
x
சென்னை, மாதவரம் பகுதியில் கோயில் உண்டியல்களை உடைத்து திருடிய சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம் பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது,  இவர்கள் சிக்கினர். மாதவரத்தை சேர்ந்த மூர்த்தி என்ற இளைஞர் தலைமையில், எருக்கஞ்சேரி ஐயப்பன், வியாசர்பாடி இமானுவேல், மாதவரம் கார்த்திக் மற்றும் ஜோசப் ஆகிய 4 சிறுவர்கள், கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.அவர்களிடமிருந்து, ஸ்குரு டிரைவர், பூட்டுகளை உடைக்க பயன்படுத்தும் இரும்பு ராடுகள் மற்றும் ஒரு கத்தி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கோயில் உண்டியலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 4 ஆயிரம் ரூபாய் சில்லறை காசுகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்