தண்ணீர் இல்லாதவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர்

தண்ணீர் இல்லாமல் அவதிபட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய சமூக ஆர்வலர் தனசேகர் என்பவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே வறட்சி காரணமாக, ஜானகிபுரம், வள்ளுவப்பாக்கம், நெய்குப்பி, கள்ளபிரான்புரம் ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக குழாய் பகுதிகளில் தண்ணீர் எப்போது வரும் என ஏக்கத்தில் காத்திருந்த மக்களுக்கு, சமூக ஆர்வலர் தனசேகர், என்பவர், தண்ணீர் அளித்து உதவியுள்ளார். இதற்காக, தமது விவசாய கிணற்றில் இருந்து காலை மாலை நேரங்களில் ஒவ்வொருவரின் வீடு தேடி சென்று தண்ணீர் கொடுத்துள்ளார். தமது சொந்த செலவில் தனசேகர், கடந்த 20 - வது நாட்களாக தண்ணீர் கொடுத்தற்கு கிராம மக்கள், வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்