"மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க முயற்சி" - மத்திய அரசு மீது கனிமொழி குற்றச்சாட்டு
நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து அந்த வெற்றிடத்தில் தங்களுக்கு தேவையானவற்றை நிரப்பி கொள்ள மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
நமது மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழித்து அந்த வெற்றிடத்தில் தங்களுக்கு தேவையானவற்றை நிரப்பி கொள்ள மத்திய அரசு இந்தி திணிப்பை கையிலெடுத்துள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய அவர், மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டதை நடத்த திமுகவினர் தயாராக உள்ளனர் என்று கூறினார். நாடே ஒருபக்கம் இருந்தாலும் தமிழகம் வேறு பக்கம் செல்லும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த தேர்தலில் பாடம் புகட்டியுள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.
Next Story