தந்தையை தாக்கிய நபர் மீது மகன் தாக்குதல் : படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
விழுப்புரம் அருகே, தந்தையை தாக்கிய நபரை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த சம்பவத்தில் மகன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
உள்ள அரசு மருத்துவக் கல்லூரி நுழைவாயிலில், தனியார் ஆம்புலஸ் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் மருத்துவமனை நுழைவாயில் அருகே உள்ள முருகையன் என்பவரின் டீக்கடைக்கு தினேஷ்குமார் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தினேஷ்குமார் தாக்கியதில் முருகையன் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தை தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முருகையன் மகன் ஆகாஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தினேஷ்குமாரை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த தினேஷ்குமார் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் இதுதொடர்பாக முருகையன், அவரின் மகன் ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story