"பள்ளி சீருடைகள் 15 நாட்களில் வழங்கப்படும்" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் உறுதி
தஞ்சையில் நடைபெற்ற கோ ஆப் டெக்ஸ் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார்.
தஞ்சையில் நடைபெற்ற கோ ஆப் டெக்ஸ் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உள்ள நூற்பாலைகளில் 60 சதவிகிதம் தமிழகத்தில் இருப்பதாகவும், ஆனால் மொத்த பருத்தி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு வெறும் ஐந்து சதவீதம் இருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்ததால், பள்ளிச் சீருடை வழங்குவது தள்ளிப் போய்விட்டதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார். இன்னும் 15 நாட்களில் பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story