இரண்டு சமூகத்தினர் இடையே மோதல் : வீடுகள் சூறை, இருசக்கர வாகனங்கள் சேதம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வலையப்பட்டி கிராமத்தில் இரண்டு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் வீடுகள் சூறையாடப்பட்டது.
இரண்டு சமூகத்தினர் இடையே மோதல் : வீடுகள் சூறை, இருசக்கர வாகனங்கள் சேதம்
x
வலையபட்டி கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் முத்தாரம்மன் கோவில் விழா நடைபெற்றது. இதில் ஒரு சமூக மக்கள் மட்டுமே சாமி கும்பிட வேண்டும் என்று கூறி, மற்றொரு சமூக மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். அந்த திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு  போட்டி நடைபெறவில்லை. அதற்கு ஒரு சமூகத்தினர் தான் காரணம் என பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர் கூறியதால் தகராறு ஏற்பட்டது.  அப்போது, கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதால் கிராமத்தில் அமைதி நிலவியது. இந்நிலையில் நேற்று ஒரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய் இணைப்பை மற்றொரு சமூகத்தினர் துண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி மோதல் முற்றியது. இதனைத்தொடர்ந்து, பெரும்பான்மையாக உள்ள சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். அங்குள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் மின் இணைப்புகளை துண்டித்து சேதப்படுத்தினர். இச்சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் பேரையூர் டிஎஸ்பி மதியழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்