மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் சில்லரை விற்பனை விலை அதிகரிப்பு

மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால் சில்லரை விற்பனை விலை அதிகரிப்பு
x
இந்திய அளவில் மாம்பழ சாகுபடியில் தமிழகம் முன்னிலை வகிப்பதற்கு ஏற்ப கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி, பல  மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவதுடன், மாம்பழ கூழ் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றன.இந்த நிலையில், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால்  மா விளைச்சல் குறைந்துள்ளது. சாகுபடி தொடங்கியது முதலே போதிய மழை இல்லாததால், மா மரங்களில் எதிர்பார்த்த அளவு பூக்கள் வரவில்லை என்று கூறிய விவசாயிகள்,  காய் பிடிக்கும் நேரத்தில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பிஞ்சுகள் உதிர்ந்து சேதமானதாகவும் வேதனையுடன் கூறினர்.மாம்பழ விளைச்சல் குறைந்துள்ளதால், வர்த்தகர்கள் கொள்முதல் விலையை குறைத்துள்ளதும் விவசாயிகளை வேதனை அடைய வைத்துள்ளது. அதே நேரத்தில் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததால் சில்லரை வியாபாரத்தில் அதிக விலைக்கு மாம்பழங்கள் விற்கப்படுவதாகவும்  விவசாயிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்