புற்களை தேடி அலையும் காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் தான் விரும்பி உண்ணும் புற்களைத் தேடி செங்குத்தான பாறைகள் நிறைந்த பகுதியில் காட்டு யானைகள் உலவி வருகின்றன
புற்களை தேடி அலையும் காட்டு யானைகள்
x
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் தான் விரும்பி உண்ணும் புற்களைத் தேடி செங்குத்தான பாறைகள் நிறைந்த பகுதியில்  காட்டு யானைகள் உலவி வருகின்றன.56 சதவீத வனப்பகுதிகளைக் கொண்ட நீலகிரி மாவட்டம், அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களின் கடைசிப் புகலிடமாக விளங்கி வருகிறது. இங்குள்ள யானை,காட்டெருமை,கரடி இந்த மூன்றும் உணவு தேடி விளை நிலங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் அடிக்கடி வரும நிலையில், அடிக்கடி மனிதர்கள்,  வன விலங்கு மோதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது. கோத்தகிரி,  பகுதிகளில் உள்ள யானைகள் தாம் விரும்பி உண்ணும் லெமன் கிராஸ் எனும் எலுமிச்சைப் புற்களைத் தேடி கால்கள் கூசும் செங்குத்தான மலை உச்சிகளில் உள்ள பாறைகளில் உணவு தேடி அலைகின்றன. வழக்கமாக மலையின் மேல் பகுதிகளுக்கு யானைகள் அதிகளவில் வருவதில்லை என்றும், கடந்த 5 ஆண்டுகளாக உணவு தேடி இந்த பகுதிக்கு, சில யானைக் கூட்டம் வருவதாக கோத்தகிரி சுற்று வட்டார பகுதி மக்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்