தொலை நிலை கல்வி மூலம் மருத்துவம் சார்ந்த படிப்பு : தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் அறிவிப்பு - செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
தொலைநிலை கல்வி திட்டத்தின்கீழ் மருத்துவம் சார்ந்த படிப்புகளை நடத்த தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தொலை நிலைக் கல்வி திட்டத்தின் கீழ், ஓராண்டு மற்றும் ஈராண்டு மருத்துவ பட்டய படிப்புகளை நடத்துவது சம்பந்தமான அறிவிப்பை, தமிழ்நாடு டாக்டர் எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் 2018 பிப்ரவரி மாதம் வெளியிட்டது. இதற்கு மத்திய அரசிடமோ, மருத்துவ கவுன்சில் இடமோ எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறி, தமிழ்நாடு டாக்டர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பல்கலைக் கழகத்தின் இந்த அறிவிப்பு செல்லாது என உத்தரவிட வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். எஸ். சுந்தர், பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என உத்தரவிட்டதுடன், ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை, அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு செலவிடும் வகையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story