வடவாறு வாய்க்கால் விரிவாக்கப் பணி : ஆய்வுக்கு வரும்படி தாம்பூல தட்டு வைத்து அழைப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ள வடவாறு வாய்க்காலை சீரமைத்து விரிவாக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர்.
வடவாறு வாய்க்கால் விரிவாக்கப் பணி : ஆய்வுக்கு வரும்படி தாம்பூல தட்டு வைத்து அழைப்பு
x
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளால் நிறைந்துள்ள வடவாறு வாய்க்காலை சீரமைத்து விரிவாக்க கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தனர். இதை அறிந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அப்பகுதிக்கு சென்று வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார். இதுகுறித்து ஆலோசிக்க பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவர் வராததால் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேரில் சென்ற டி.ஆர்.பி.ராஜா, தாம்பூல தட்டு வைத்து ஆய்வுக்கு வரும்படி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனுக்கு அழைப்பு விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்